நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Rakshana MA Jan 15, 2025 09:08 AM GMT
Rakshana MA

Rakshana MA

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களிலும் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், அவர்களின் மொத்த எண்ணிக்கை 374 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு - வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு முன்னால் விபத்து

கிழக்கு - வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு முன்னால் விபத்து

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 

இதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 304 டெங்கு நோயாளர்களும், காலி மாவட்டத்திலிருந்து 169 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்திலிருந்து 134 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை | 2352 Dengue Cases Registered In First 14 Days 2025

அத்துடன், கடந்த 2024 ஆம் ஆண்டில் நாட்டில் 49,887 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 24 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதியவர் ஒருவரின் மோசமான செயல்! சம்மாந்துறையில் கைது

முதியவர் ஒருவரின் மோசமான செயல்! சம்மாந்துறையில் கைது

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW