போதைப்பொருள் கடத்திய 23 பிக்குகள் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
SriLankan Airlines
Bandaranaike International Airport
Sri Lanka
Thailand
By Vinoja
தாய்லாந்திலிருந்து போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்து கைது செய்யப்பட்ட 23 பிக்குகளை எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பிக்குகள் இன்று (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இணையவழி முறைமையூடாக முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தாய்லாந்திலிருந்து 110 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள, 112 கிலோகிராம் 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ஆகிய போதைப்பொருட்களை கடத்தியமை தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 25 அன்று குறித்த பிக்குகள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.