பாகிஸ்தானில் கோர விபத்து: 25 பேர் பலி

Pakistan Death
By Fathima Aug 06, 2023 07:42 PM GMT
Fathima

Fathima

பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் தொடருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்ததுடன் 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்து தடம் புரண்டதில் எட்டு பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு குழுக்கள் விரைந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

மேலும், சம்பவ இடத்திற்கு நிவாரண தொடருந்து அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொடருந்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கோர விபத்து: 25 பேர் பலி | 22 Kill Over 80 Injured Train Derails In Pakistan  

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.