யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர்...!

Sri Lanka Police Jaffna Law and Order
By Shalini Balachandran Apr 05, 2026 05:36 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வடமராட்சி - நெல்லியடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கரணவாய் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 4 லட்சம் ரூபா பெறுமதியான 520 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளையதினம் பருத்திதுறை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.