மூன்று மாதங்களில் 30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் !

Sri Lanka Police Investigation Crime
By Madheeha_Naz Mar 12, 2024 02:12 PM GMT

இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதத்திற்குள்ளான காலப்பகுதியில் சுமார் 30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களி்ற்குள் இடம்பெற்றுள்ள கொலை சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்த சம்பவங்களுள் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். 

மூன்று மாதங்களில் 30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் ! | 21 Murders Woithin Three Months

மேலும் இந்த 30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஏனைய 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டன.” என சுட்டிக்காட்டியுள்ளார்.