வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Parliament of Sri Lanka National People's Power - NPP Budget 2026
By Chandramathi Nov 14, 2025 01:05 PM GMT

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன.

வரவு செலவு திட்டம்

இதேவேளை குறித்த வாக்கெடுப்பில் 8 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் | 2026 Budget Passed

கடந்த 7ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் இந்த வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.  

குறித்த வரவு செலவு திட்டம் தொடர்பிலான விவாதம், தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று (14.11.2025) வாக்கெடுப்பு இடம்பெற்றது.