திகாமடுல்லவில் முன்னிலை வகிக்கும் சஜித்
பொத்துவில் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான பொத்துவி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 70,942 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 30,263 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 18,053 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 4,802 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்
அம்பாறை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான அம்பாறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 60,292 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 53,410 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க18, 577 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 5,630 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சம்மாந்துறை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்தின் சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 41, 791 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 15, 344 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 8, 569 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் 2, 299 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
கல்முனை தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 26,873 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க15,686 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 10,937 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 2.623 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தபால் மூல வாக்குகள்
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 11,120 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 7,368 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,719 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 318 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 233 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |