பொது வேட்பாளர் நிலைக்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தால் தேர்தலுக்கு தயார்: ரொஷான் ரணசிங்க
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் நிலைக்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தால், தாம் பொது வேட்பாளராக போட்டியிட தயார் என்று இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் நிர்வாக விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் முரண்பட்டதை அடுத்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
2024 ஜனாதிபதித் தேர்தல்
இந்த நிலையில் அரசியல் குழுக்கள், தம்மை 2024 பொது வேட்பாளராக பெயரிடுவதற்கான முன்மொழிவை முன்வைத்தால், தாம் அதை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்போவதாக ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டில் இயற்கை வளங்கள், திறமையான பணியாளர்கள் மற்றும் மூலோபாய இருப்பிடங்கள் உள்ளன.
முறையான முகாமைத்துவம் மற்றும் திறமையான பயன்பாட்டினால், இந்த வளங்களைக் கொண்டு இலங்கையின் முழு திறனையும் வெளிக்காட்ட முடியும் என்றும் ரொஷான் ரணசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சமத்துவமான அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கு வலுவான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை முக்கியமான தேவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.