பட்ஜட் வாக்கெடுப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

By Madheeha_Naz Dec 14, 2023 12:18 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான இறுதி வாக்கெடுப்பு 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று (13.12.2023) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது

இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு எதிராக 81 வாக்குகள் அளிக்கப்பட்டன.

 மேலும் இந்த வாக்கெடுப்பிலிருந்து யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2024 ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.