2023 ரக்பி உலக கிண்ணம் : சம்பியன் பட்டத்தை வென்ற தென்னாபிரிக்கா
Rugby
New Zealand
South Africa
By Madheeha_Naz
2023 ரக்பி உலக கிண்ண தொடரின் சம்பியன் பட்டத்தை தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது.
குறித்த போட்டி இன்று(29.10.2023)அதிகாலை பிரான்சில் இடம்பெற்றது.
சம்பியன் பட்டம்
போட்டியின் முதல் பாதியின் போது தென் ஆபிரிக்கா 11 புள்ளிகளையும் நியூசிலாந்து 6 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டிருந்தன.
பின்னர் அபாரமாக விளையாடிய நியூசிலாந்து மேலும் ஐந்து புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.
இதனிடையே தென் ஆபிரிக்க அணி மேலும் ஒரு புள்ளியைப் பெற்றுக்கொண்டது.
நியூசிலாந்து அணியை 12க்கு 11 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி சம்பியன் படத்தை வென்றுள்ளது.
உலக கிண்ண ரக்பி இறுதிப் போட்டியொன்றில் இவ்வாறான சம்பவம் பதிவான முதல் தடவை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.