நூற்றுக்கணக்கான பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்
2023 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 190 பேரின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று(31) வெளியாகியிருந்தது.
இந்நிலையில், 190 பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அனுமதி
இதற்கமைய,146 பாடசாலை பரீட்சாத்திகளினதும், 44 தனியார் பரீட்சாத்திகளினதும் பெறுபேறுகளே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை,உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 269,613 பரீட்சாத்திகளில் 173,444 பேர் (64.33%) பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமையுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346,976 பரீட்சாத்திகள் நாடு முழுவதிலுமிருந்து தோற்றியுள்ளனர்.
இதில் 281,445 பாடசாலை மாணவர்களும் 65,531தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.