உயர்தர பரீட்சை தொடர்பான அறிவிப்பு
A D Susil Premajayantha
G.C.E.(A/L) Examination
G.C.E. (O/L) Examination
By Kamal
எதிர்வரும் நத்தார் பண்டிகைக்கு முன்னர் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமதா இருக்க இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்தர பரிட்சை நடத்தப்பட விருந்தது எனினும் பல்வேறு தாமதங்கள் காரணமாக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பரீட்சைகளை இந்த ஆண்டிலேயே நடத்த முயற்சிப்பதாக அமைச்சர் தெரிவிக்கின்றார்.
அதன்படி உயர்தர பரீட்சை டிசம்பர் மாதம் நடத்தி முடிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறு எனினும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த ஆண்டு நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.