சொத்து விபரங்களை வெளியிடாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Sri Lanka Politician Sri Lanka Sri Lanka Cabinet
By Laksi Aug 13, 2024 01:07 PM GMT
Laksi

Laksi

இலங்கையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இதுவரை தமது வருடாந்த சொத்து விபரங்களை முன்வைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு,இது குறித்து 3 தடவைகள் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயமானது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தொடர்பில் வெளியான தகவல்

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தொடர்பில் வெளியான தகவல்

கால அவகாசம்

இந்தநிலையில், சொத்து விபரங்களை கூடிய விரைவில் சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

சொத்து விபரங்களை வெளியிடாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவித்தல் | 20 Mps Fail To Declare Assets Issued

அத்தோடு, இதனை பின்பற்றாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் புதிய சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், சொத்து விபரங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மீது கொலை வழக்குப் பதிவு

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மீது கொலை வழக்குப் பதிவு

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆதரவு: ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆதரவு: ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW