மாகாணமட்ட ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவான மாவடிப்பள்ளி மாணவர்கள்!
மாகாணமட்ட ஒலிம்பியாட் போட்டிக்கு மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஸ்ரப் மகா வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, தரம் 6 இல் கல்வி கற்கும் எம்.ஆர்.என்.சஹான், ஆர்.எம்.அக்ஸத் எனும் இரு மாணவர்களும் தரம் 7இல் கல்வி கற்கும் வை.எம்.ஹிக்காம் எனும் மாணவனும் தரம் 11 இல் கல்வி கற்கும் வை.எப்.சகாதா எனும் மாணவியும் கல்முனை கல்வி வலயத்தால் நடாத்தப்பட்ட வலய மட்ட ஒலிம்பியாட் போட்டிகளில் தெரிவாகியுள்ளனர்.
வாழ்த்துக்கள்...
குறித்த மாணவர்களை பயிற்றுவித்த ஆசியர்களுக்கும் ஏனையோர்களுக்கும் அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் 11ஆம் திகதி அட்டாளைச்சேனையில் நடைபெறவிருக்கும் மாகாண மட்ட போட்டிகளில் வெற்றியீட்டி தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்படுவதற்கும் பாடசாலை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

