78 வயது பாட்டியை தகாத முறைக்கு உட்படுத்திய 17 வயது மாணவன் : பொலிஸார் விசாரணை

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Jul 06, 2024 09:12 PM GMT

பலாங்கொடை தூர்வெல ஓயாவில் 78 வயதுடைய திருமணமான பெண்ணொருவர் தகாத முறைக்கு உட்படுத்தி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய பாடசாலை மாணவனை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை பதில் நீதவான் டி.இ.எம். சந்திரசேகரன் உத்தரவிட்டார். 

சந்தேகநபரின் உடல், உள மற்றும் சமூக நோய்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், சந்தேக நபரை மரபணு( DNA) பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

பலாங்கொடை முகுனமலை பிரதேசத்தில் வசித்த எம்.எல். சிரியாவதி என்ற பெண்ணொருவர் கடந்த 27ஆம் திகதி குளிப்பதற்கு தொரவெல ஓயாவிற்கு சென்றிருந்த நிலையில், அங்கு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனை

பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் வைத்தியர்களுக்கு மரணம் தொடர்பில் சந்தேகம் இருந்தமையினால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதுடன் இது தொடர்பில் நீதிமன்றில் பொலிஸார்அறிவித்திருந்தனர்.

78 வயது பாட்டியை தகாத முறைக்கு உட்படுத்திய 17 வயது மாணவன் : பொலிஸார் விசாரணை | 17 Year Old Boy Raped The Grand Mother

அங்கு, பலாங்கொடை நீதவான் திருமதி பாக்யா தில்ரக்சி, சட்ட வைத்தியரால் பிரேத பரிசோதனையை நடத்துமாறு உத்தரவிட்டார்.

பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி ஐ.எல்.ரத்நாயக்க சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, ​​பெண் பல சந்தர்ப்பங்களில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்தையும் வாயையும் நெரித்து கொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்...!