17 இலங்கையர்கள் காசாவிலிருந்து எகிப்து செல்வதற்கு அனுமதி
காசாவில் நிர்க்கதியாகவிருந்த 17 இலங்கையர்களுக்கு எகிப்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக இந்த இலங்கையர்கள் காசா பிராந்தியத்தில் நிர்க்கதியாகியுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இந்த தகவலை வழங்கியுள்ளது.
ராபா நுழைவாயில் பகுதியூடாக பயணிக்க அனுமதி
காசா பிராந்தியத்தின் ஒரே நுழைவாயில் பகுதியான ராபா நுழைவாயில் பகுதியூடாக இவர்கள் எகிப்து நோக்கி பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இஸ்ரேலில் வாழ்ந்து வரும் இளைஞர்களுக்கு அனர்த்த நிலைமைகள் எதுவும் கிடையாது எனவும், இலங்கையர்களின் பாதுகாப்பினை இஸ்ரேலிய அரசாங்கம் உறுதி செய்துள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாபா தெரிவித்துள்ளார்.