இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 17 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 17 பேரை இன்று(14.09.2023) அதிகாலையில் காங்கேசன்துறை வடக்கு கடற்படை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனையடுத்து கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை வடக்கு கடற்படையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
காங்கேசன்துறை வடக்கு கடற்படை முகாம் கடற்படையினர் இன்று அதிகாலை 1 .30 மணியளவில் கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே இலங்கை
கடற்பரப்பிற்குள் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்ததுடன் அவர்களது 3 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.