மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம் : 16 வயது சிறுவனை பலியிட முயற்சி!

Batticaloa Sri Lanka Crime Law and Order
By Vinoja Apr 13, 2026 11:07 AM GMT
Vinoja

Vinoja

மட்டக்களப்பு காத்தான்குடி மண்முணை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில், 16 வயது சிறுவன் ஒருவரை பலிகொடுத்து புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவதுடன் தொடர்புடையதாக கருதப்படும் மொரட்டுவ பிரதேச செயலக பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சிறுவன் பொலன்னறுவைச் சேர்ந்தவர் எனவும் இவர் 3 தலைமுறையாக முதல் ஆண்பிள்ளை எனவும் 3 நட்சத்திரங்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் பிறந்தவர் எனவும் இவரை பலிகொடுத்து புதையல் தோண்டுவதற்கு அழைத்துவரப்பட்டாகவும் சிறுவன் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.