அதிகரித்துள்ள மாணவர்களுக்கான கொடுப்பனவு
Parliament of Sri Lanka
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
Grade 05 Scholarship examination
Budget 2025
By Rakshana MA
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை ரூ.750இல் இருந்து ரூ.1,500 ஆக அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று(17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புலமைப்பரிசில் கொடுப்பனவு
மேலும், மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு தற்போதுள்ள 5000 ரூபாயிலிருந்து 7500 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும், இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பின் மேம்பாட்டிற்காக 135 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |