எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 15 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது

Indian fishermen Jaffna Douglas Devananda Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Fathima Jul 09, 2023 07:28 AM GMT
Fathima

Fathima

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 15 தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இன்று (09.07.2023) அதிகாலை அத்துமீறி உள்நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரு படகுகளில் வந்த கடற்றொழிலாளர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீரியல் வளத்துறை அதிகாரிகள்

இவ்வாறு கைது செய்யப்பட்ட 15 தமிழக கடற்றொழிலாளர்களும் அவர்கள் பயணித்த இரு படகுகளும் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.