இலங்கையில் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் பல மூடப்படும் அபாயம்

Mahinda Amaraweera Ranil Wickremesinghe Economy of Sri Lanka Value Added Tax​ (VAT)
By Mayuri Jul 23, 2024 02:57 AM GMT
Mayuri

Mayuri

இலங்கையில் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் பல மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தொழிற்சாலைகளில் பணிபுரியும்  சுமார் 15,000 பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு நேற்று விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கையில் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் பல மூடப்படும் அபாயம் | 15 000 People Are At Risk Of Losing Jobs Sri Lanka

தேங்காய் எண்ணெய் விலை

இந்த நிலையில் அமைச்சர் கூறுகையில், சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்யும் போது துறைமுகத்தில் செலுத்தப்படும் வரிக்கு மேலதிகமாக, தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் வரி செலுத்த வேண்டியிருப்பதால் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளது. 

அதிக வரி விதிப்பினால் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW