காத்தான்குடி மாணவியால் பிரதமருக்கு மகஜர் கையளிப்பு
காத்தான்குடியிலிருந்து கொழும்பு வரையான துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்த மாணவியால் பிரதமருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பத்ரியா வித்தியாலயத்தில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் பாத்திமா நதா என்ற மாணவியே இன்று (14) பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.
மகஜர் கையளிப்பு
போதைபொருள் மற்றும் சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்துவதற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் எதிர்கால சந்ததிகளை போதைவஸ்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும் குறித்த மாணவி கடந்த (7) ஆம் திகதி இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்தார்.
இதனையடுத்து, குறித்த சட்டவிரோத செயல்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்குமாறும் கோரி இன்றையதினம் இந்த மகஜரை அவர் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |