திருகோணமலையில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு
திருகோணமலை - பூநகர் பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது நேற்று (1) இடம்பெற்றுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த தரம் 10இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இந்த நிலையில், மாணவியின் சடலம் நேற்றைய தினம் திருகோணமலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்ட போது, சட்ட வைத்திய அதிகாரி வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதேவேளை, குறித்த சிறுமியின் தந்தை 2013ஆம் ஆண்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், மாணவியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |