கடல் வழியாககடத்திச் செல்லப்பட்ட பெருந்தொகை தங்கம் : இந்திய சுங்கத்துறை பறிமுதல்
இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 14.8 கிலோ தங்கம் இந்திய சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இருந்து கடல் வழியாக தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே களிமண்குண்டு கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
இதன்போது நாட்டிலிருந்து இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டு இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இரு சக்கர வாகனத்தில் தங்கம் கொண்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.