13ஐ நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ரணிலிடம் இல்லை! மொட்டு கட்சி திட்டவட்டம்

13th amendment Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka Podujana Peramuna Sri Lankan political crisis
By Fathima Aug 14, 2023 10:00 AM GMT
Fathima

Fathima

ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியாக இருப்பதால் அவரால் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

13ஐ நடைமுறைப்படுத்துவதற்கும் அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். அத்துடன் தமிழ்க் கட்சிகளையும் அழைத்துப் பேசி வருகின்றார்.

இந்தியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இதை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதியும் வழங்கியுள்ளார்.

13ஐ நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ரணிலிடம் இல்லை! மொட்டு கட்சி திட்டவட்டம் | 13Th Amendment In Sri Lanka

அதிகாரம் ரணிலிடம் இல்லை

இந்நிலையில், சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி இதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார்.  

13ஐ நடைமுறைப்படுத்துவதற்கான யோசனையைக் கட்சிகளிடம் இருந்தும் அவர் கோரியுள்ளார்.

இந்தநிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், 13ஐ நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் ரணிலிடம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.