13 ஐ நடைமுறைப்படுத்தினால் மகிந்தவின் நிலை தான் ரணிலுக்கும் ஏற்படும்: உதய கம்மன்பில

13th amendment Mahinda Rajapaksa Sri Lanka Politician Sri Lankan political crisis Udaya Gammanpila
By Fathima Aug 13, 2023 12:00 PM GMT
Fathima

Fathima

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்,13 இற்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்பை ஒன்றிணைப்போம் என புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், 13 பிளஸ் என்ற நோக்கத்துடன் செயற்பட்டதாலேயே மகிந்த ராஜபக்ச கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டார்.

மக்களால் புறக்கணிப்பு

13 ஐ நடைமுறைப்படுத்தினால் மகிந்தவின் நிலை தான் ரணிலுக்கும் ஏற்படும்: உதய கம்மன்பில | 13Th Amendment Cant Be Implement Gammanpila

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 13 ஐ நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஜனாதிபதி பிரச்சினைகளைத் தோற்றுவிக்க முயற்சி செய்கின்றார்.

அரசமைப்பின் ஒரு திருத்தமாகக் காணப்படும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த புதிதாகச் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது என தெரிவித்தார்.