சீனன்கோட்டை பாஸிய்யாவில் 132 வது வருட மனாகிப் மஜ்லிஸ் இன்று ஆரம்பம்
பேருவளை, சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் 132ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸ் இன்று (01.06.2023) மாலை அஸர் தொழுகையின் பின்னர் நடைபெறவுள்ளது.
கலீபதுஷ் ஷாதுலிகளான மௌலவி எம்.ஐ.எம். ரபீக் (பஹ்ஜி), மௌலவி எம்.எம். செய்னுலாப்தீன் (பஹ்ஜி) ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது.
சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்படி மஜ்லிஸ் நடைபெறுவதோடு தொடர்ந்து 9 நாட்கள் மனாகிப் மஜ்லிஸ் மற்றும் உலமாக்களினால் மார்க்க உபன்னியாசங்களும் நிகழ்த்தப்படும்.
159வது வருட மனாகிப் மஜ்லிஸின் தமாம் வைபவம்
தினமும் இடம்பெறும் மனாகிப் மஜ்லிஸில் ஆத்மீகஞானி இமாம் அபுல் ஹஸன் அலியுஷ் ஷாதுலி (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு, ஆன்மீகப் பணிகள் பற்றிய விசேட மார்க்கச் சொற்பொழிவுகள் இடம்பெறவுள்ளன.
சீனன்கோட்டை பள்ளிச் சங்கத் தலைவர் ஏ.எச்.எம். முக்தார் ஹாஜியாரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெறும் இம்மஜ்லிஸில் கலீபாக்கள், உலமாக்கள், முகத்தமீன்கள், இஹ்வான்கள் பலரும் பங்குபற்றுவரென பள்ளிச்சங்க செயலாளர் ஷிஹாப் ஹாஜியார் தெரிவித்தார்.
இதேவேளை, காலி அஸ்ஸாவியதுல் மக்கிய்யதுல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா சோலை ஸாவியாவில் 159வது வருட மனாகிப் மஜ்லிஸின் தமாம் வைபவம் இன்று (01) இரவு நடைபெறும்.
இம்மஜ்லிஸில் முஸாக்கரா பயானை கலீபதுல் குலபா மௌலவி அல் ஆலிம். எம்.இஸட். முஹம்மத் ஸுஹ்ர் (பாரி) நிகழ்த்தவுள்ளார்.