அரச வைத்தியசாலைகளுக்கு மேலும் 1300 நியமனங்கள்: வெளியான அறிவிப்பு
Government Employee
Government Of Sri Lanka
By Dhayani
எதிர்வரும் மார்ச் மாதம் அரச வைத்தியசாலைகளுக்கு 1300 வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது பயிற்சியை நிறைவு செய்த குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இன்டர்ன்ஷிப் முடித்த 590 வைத்தியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு தற்போது வெற்றிடமாக இருந்த அரச வைத்தியசாலைகளுக்கு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வைத்திய தட்டுப்பாடு
இதன்படி எதிர்காலத்தில் நிலவும் வைத்திய தட்டுப்பாடு தீர்க்கப்படும் என செயலாளர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |