13 அடி நீள இராட்சச முதலை: சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்
அமெரிக்கா - புளோரிடாவின் மேற்கு பகுதியில் உள்ளது பினாலஸ் கவுன்டி பகுதியில் உள்ள நீர்நிலையில் மனித உடல் பாகத்தை கவ்வியவாறு சிக்கிய முதலை சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய அப்பகுதி பொலிஸார் முதலையை கொன்றுள்ளனர்.
இந்நிலையில் கொள்ளப்பட்ட முதலையானது 13-அடி நீளமுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பொலிஸ் அதிகாரிகளுடன் அம் மாநில வனவிலங்கு பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்
அத்துடன் விசாரணையில் முதலையின் வாயிலிருந்த மனித உடல் பாகங்கமானது, 41 வயதான சப்ரீனா பெக்காம் எனும் பெண் என தெரியவந்துள்ளது.
அதேவேளை சில மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கையை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளதுடன் "இவ்வளவு நீளமுள்ள ஒரு ராட்சச முதலை இங்குள்ள ஏரியில் இருக்கலாம் என நினைத்து கூட பார்த்ததில்லை" என இச்சம்பவம் குறித்து டெர்ரி வில்லியம்ஸ் எனும் அப்பகுதிவாசி தெரிவித்துள்ளார்.
மேலும் இச் சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய தமிழர்! குடியரசு கட்சியின் வேட்பாளர் கருத்து கணிப்பு வெளியானது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |