இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்: சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தகவல்
இம்மாதத்தின் கடந்த மூன்று வாரங்களில் 120,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த கால பகுதியில் இலங்கைக்கு (Sri Lanka) வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 127,925 ஆக பதிவாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் (India) எனவும் அவர்களின் எண்ணிக்கை 30,442 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பிரித்தானியா (United Kingdom), சீனா (China), ஜெர்மனி (Germany), நெதர்லாந்து (Netherlands) போன்ற நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின்படி, இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் 11 இலட்சத்து 38,174 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |