மட்டக்களப்பில் ஓடும் தொடருந்தில் பயணித்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்

Batticaloa Sri Lanka Railways Accident Department of Railways
By Fathima Apr 12, 2024 07:22 AM GMT

12 வயது சிறுமி ஒருவர் தொடருந்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் (Colombo) இருந்து மட்டக்களப்பு (Batticaloa) நோக்கி பயணித்த தொடருந்தில் பயணித்த சிறுமி ஒருவரே படுகாயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மேலதிக விசாரணை

சிறுமி தொடருந்து பெட்டியில் சாப்பிட்டுவிட்டு கையை கழுவுவதற்காக சென்றபோது தொடருந்தில் இருந்து விழுந்துள்ளார்.

12 years girl injuded in train accident batticaloa

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறுமி வெலிகந்த (Welikanda) பிரதேச வைத்தியசாலையில் இருந்து பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

கட்டுபாத்த - கெகுனுகொல்ல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து மட்டக்களப்புக்கு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தொரியவந்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.