உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தாமதம் தொடர்பில் வெளியான தகவல்
Ministry of Education
University of Colombo
Education
By Thulsi
க.பொ.த உயர்தர பரீட்சையின் 8 பாடங்களின் மதிப்பீடுகள் இடம்பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், மீதமுள்ள பாடங்களின் மதிப்பீட்டையும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தினார்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம்
இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இந்த வாரத்தில் வழமைக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இது வரை விடைத்தாள் பரீட்சைக்கு அழைக்கப்படவில்லை என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.