திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த 11 வயது பாடசாலை மாணவி
பாடசாலை மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் கெக்கிராவையைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலை முடிந்த பின்னர் சிறுமி பாடசாலை பேருந்தில் ஏறி முயன்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
மாணவி உயிரிழப்பு
சம்பவத்திற்குப் பிறகு அவர் உடனடியாக கெக்கிராவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி பிரேத பரிசோதனை செய்த போதிலும் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
இதன் விளைவாக, உடல் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்விற்காக மருத்துவ பரிசோதகருக்கு அனுப்பப்பட்டு, திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பின்னர், சிறுமியின் உடல் அவரது பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |