பாகிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

Pakistan Weather
By Fathima May 28, 2023 10:06 PM GMT
Fathima

Fathima

பாகிஸ்தான் - காஷ்மீரில், சனிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, சிறுவன் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கில்கிட் - பால்டிஸ்தான் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் இணைக்கும் ஷௌண்டர் கணவாய் அருகே காஷ்மீரில் இருந்து ஆட்டுமந்தைகளுடன் திரும்பிக்கொண்டிருந்த 35 பேர் பனிச்சரிவில் சிக்கியுள்ளனர்.

பாகிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு | 11 People Were Killed In An Avalanche In Pakistan

இந்த பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், 15 கால்நடைகளும் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தொடரும் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.