சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Rakshana MA Mar 25, 2025 04:40 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் தற்போது பல்வேறு இடங்களிலும் பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனச் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 10 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நிலவும் மழையுடனான காலநிலையைக் கருத்திற்கொண்டு தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு நாளை மறுதினம் (27) முதல் இருநாள் டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.  

தொடருந்தை இயக்க மறுத்து அடம்பிடித்த ஓட்டுநர்..! உணவுப் பொதியால் ஏற்பட்ட பிரச்சினை

தொடருந்தை இயக்க மறுத்து அடம்பிடித்த ஓட்டுநர்..! உணவுப் பொதியால் ஏற்பட்ட பிரச்சினை

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பு மாநகர எல்லைப்பகுதி, கம்பஹா, களுத்துறை, மாத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை | 10886 Dengue Patients Registered In The Country

குறித்த மாவட்டங்களில் அச்சுறுத்தல் நிலவும் 37 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கடும் காய்ச்சலுடனான தலைவலி, குமட்டல், வாந்தி, தோளில் சிவப்பு புள்ளிகள், இரத்தபோக்கு, தசை மற்றும் மூட்டு வலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்தியசாலைக்கோ அல்லது தகுதி வாய்ந்த வைத்தியரிடமோ சென்று உரிய சிகிச்சையை பெற்றுக் கொள்ளுமாறு தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு பொதுமக்களைக் கோரியுள்ளது.

பிரமிட் போன்ற மோசடிக்குள் மக்கள் சிக்குவதற்கு இதுவே காரணம்: மத்திய வங்கியின் ஆளுநர் கூறும் விடயம்

பிரமிட் போன்ற மோசடிக்குள் மக்கள் சிக்குவதற்கு இதுவே காரணம்: மத்திய வங்கியின் ஆளுநர் கூறும் விடயம்

அக்கரைப்பற்று – அம்பாறை பிரதான வீதியில் விபத்து

அக்கரைப்பற்று – அம்பாறை பிரதான வீதியில் விபத்து

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW