அவுஸ்திரேலியாவில் லொத்தர் சீட்டிழுப்பில் 100 மில்லியன் வெற்றி பெற்றவரின் இலக்கு!
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற லொத்தர் சீட்டிழுப்பில் மாபெரும் வெற்றி ஒன்று பதிவாகியுள்ளது.
இதற்கமைய லொத்தர் சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர்களை ஒருவர் வென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த லொத்தர் வெற்றி அவுஸ்திரேலிய வரலாற்றில் இரண்டாவது பெரிய வெற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற்றவரின் இலக்கு
சிட்னியில் வசிக்கும் ஒருவர் அந்நாட்டின் Powerball லொத்தர் சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர் முதல் பரிசை வென்றுள்ளார்.
குறித்த வெற்றியாளர், இந்த பணத்தில் வீடு வாங்குவதே தனது முதல் இலக்கு என கூறியுள்ளார்.
முன்னதாக, 2019 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் ஒருவர் 107 மில்லியன் டொலர்களை லொத்தர் சீட்டிழுப்பில் வென்றிருந்தார். இது அவுஸ்திரேலிய நாட்டின் மிகப்பெரிய லொத்தர் வெற்றியாக கருதப்படுகிறது.