நாளை 10 மணித்தியால நீர்வெட்டு

Colombo Sri Lanka
By Nafeel May 07, 2023 03:18 PM GMT
Nafeel

Nafeel

நாளை (08) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

லங்கா மின்சார தனியார் நிறுவனத்தினால் (LECO) மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொலன்னாவ நீரேற்று நிலையத்திற்கான மின்சார விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளால் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.

நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் பிரதேசங்கள் பின்வருமாறு, கொலன்னாவ நகரசபை, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எதுல்கோட்டை, நாவல, கொஸ்வத்தை, இராஜகிரிய மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதி மற்றும் அனைத்து கிளை வீதிகள்.

நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தேவைக்கு ஏற்ப நீரைச் சேகரிக்குமாறு பிரதேசவாசிகளிடம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.

மேலதிக தகவல்களை அறிய விரும்பினால், 1939 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.