கல்லூரி மாணவர்கள் இணையவழியில் ஆட்சேர்ப்பு! அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபா சேமிப்பு

Ministry of Education A D Susil Premajayantha Education
By Mayuri Sep 12, 2024 02:15 AM GMT
Mayuri

Mayuri

கல்லூரி மாணவர்களை இணையவழியில் ஆட்சேர்ப்பு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் பத்து மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக முன்னர் 13.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும், இம்முறை அது 3.5 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஆட்சேர்ப்பு செய்வதற்கான காலம்

மேலும் தெரிவிக்கையில், பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒன்றரை வருடங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை எடுத்தது.

கல்லூரி மாணவர்கள் இணையவழியில் ஆட்சேர்ப்பு! அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபா சேமிப்பு | 10 Million Rupees Savings For The Government

எனினும் இம்முறை 04 மாதங்களில் மிகக்குறுகிய காலப்பகுதியில் ஆட்சேர்ப்பை வினைத்திறனாக மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கல்விப் பல்கலைக்கழகம் ஸ்தாபிப்பது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், 19 கல்லூரிகளையும் இணைத்து கல்விப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இறுதி வரைவு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW