சீரற்ற வானிலையால் பறிபோன 10 உயிர்கள்!

Sri Lankan Peoples Climate Change Weather
By Fathima Nov 24, 2025 12:02 PM GMT
Fathima

Fathima

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அத்துடன் 10 மாவட்டங்களில் 504 குடும்பங்களைச் சேர்ந்த 1,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் பறிபோன 10 உயிர்கள்! | 10 Lives Lost Due To Inclement Weather

இதன்படி 193 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், 2 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.