யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கையளிப்பு
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக பயனாளிகளுக்கு 10 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த வீடு கைளிக்கும் நிகழ்வானது, இன்றைய தினம் (05) கல்முனை, சேனைக்குகுடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலக கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2024இல் 28 வீடுகள் அமைப்பதற்காக நிதி உதவி வழங்கப்பட்டிருந்தன.
பயனாளிகளுக்கான வீடுகள் கையளிப்பு
இதன்படி, கடந்த ஆண்டு அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி வீடமைப்பு மற்றும் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 10 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டிருந்தாலும் வீடுகளை பெற்றுக்கொண்ட பயனாளிகளின் பங்களிப்புடனும் இவ்வீடுகள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீ ரங்கன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










