ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவீனங்கள்: அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ள விடயம்

Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Jul 29, 2024 06:35 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவீனங்களை மதிப்பீடு செய்து 1.4 பில்லியன் தேவைப்படுவதாக அஞ்சல் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

அஞ்சல் கட்டணங்கள் தற்போது அதிகரித்துள்ள காரணத்தினால் தேர்தல் செலவுகள் அதிகரித்துள்ளதாக அஞ்சல் மா அதிபர் பி.சத்குமார (P. Sathkumara) தெரிவித்துள்ளார்.

அத்துடன் அஞ்சல் திணைக்களத்திற்கு குறிப்பிடத்தக்க பணியாளர் வெற்றிடங்களை எதிர்நோக்குவதாகவும் அஞ்சல் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு

தேர்தல் தொடர்பான பணி

இதனையடுத்து, தேர்தல் தொடர்பான பணிகளை திறம்பட நிறைவேற்ற 1,000 முதல் 2,000 அஞ்சல் பணியாளர்களுக்கு வெற்றிடங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவீனங்கள்: அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ள விடயம் | 1 4 Billion Spent Posts On Presidential Election

மேலும், பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஓய்வுபெற்ற அஞ்சல் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு தேசிய தேர்தல் ஆணையகத்திடம் அனுமதி பெற திட்டமிட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் பி.சத்குமார குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி அனுமதி குறித்து வெளியான புதிய தகவல்

வாகன இறக்குமதி அனுமதி குறித்து வெளியான புதிய தகவல்

பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW