ஹர்த்தால் நடத்தியவர்கள் எதற் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது தலைமறைவாகியது ஏன்?
** கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பிலுள்ள அனைத்துக்கட்சிகளும் தமிழ் மக்களுக்கு அப்பட்டமான பொய் முகங்களை காட்டிவருவதாகவும் எனவே தமிழ் மக்கள் இதனை சரியாக புரிந்து கொள்ளவேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் (29) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் 13வது திருத்தம் தொடர்பாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.
தமிழ் மக்களிடமிருந்து வாக்குகளை பெறுவதற்காக 13ஆம் திருத்தம் தமிழ் மக்களின் தீர்வு அல்ல என தெரிவித்துவிட்டு, இந்தியா அமெரிக்கா, அரசாங்கம், மற்றும் சிங்கள முற்போக்குவாதிகளிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 13வது திருத்ததையே வலியுறுத்துவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க 13வது திருத்ததே தீர்வு என்று அறிவித்த போது எதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு சென்றது என்றும் இது ரணிலுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்ட ஏமாற்று வேலை என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் அரசாங்கத்திற்கு எதிராக ஹர்த்தால் அனுஸ்டித்த தமிழ் தரப்புக்கள் அனைத்து நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஓடி ஒளிந்து அரசுக்கு ஆதரவு வழங்கியிருந்தாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடுகின்றார்.
இந்த ஹர்த்தால் நடடவடிக்கையால் 100 கோடி ரூபா, ஒருநாளில் மட்டும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.
