தமனையை வீழ்த்தி வெற்றியை தமதாக்கிய கல்முனை ஸாஹிரா!

Cricket Sri Lankan Peoples Eastern Province Kalmunai
By Rakshana MA Jul 21, 2025 11:44 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை பாடசாலை கிரிக்கட் சங்கத்தினால் நடத்தப்பட்ட 15 வயதுக்குட்பட்ட டிவிஷன்-III கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி அணிக்கும், தமனை மகா வித்தியாலய அணிக்கும் இடையிலான போட்டி சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஸாஹிரா அணி 34.3 ஓவர்களை எதிர்கொண்டு 03 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களை பெற்று போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

கந்தளாயில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்றிட்டம்

கந்தளாயில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்றிட்டம்

கபடி போட்டி 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தமனை மஹா வித்தியாலய அணி முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 27 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதால் முதல் இன்னிங்ஸில் ஸாஹிரா கல்லூரி சிறப்பான வெற்றியைப் பெற்றது.

தமனையை வீழ்த்தி வெற்றியை தமதாக்கிய கல்முனை ஸாஹிரா! | Zahira Kalmunai Cricket U15 Victory 2025

இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்தும் ஆட அனுமதி வழங்கியதற்கு இணங்க தமனை மகா வித்தியாலய அணி இரண்டாம் இன்னிங்ஸிலும் சகல விக்கட்டுக்களையும் இழந்து 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதால் ஸாஹிரா கல்லூரி போட்டியில் வெற்றி பெற்றுக்கொண்டது.

அதன்படி, கல்முனை ஸாஹிரா அணி வீரர் எஸ்.ஆபித் (78) பந்துகளில் 112 ஓட்டங்களையும், மற்றும் எம்.டி அப்துல்லாஹ் 65, எஸ்.சிலக்சன் 62 தலா ஓட்டங்களை பெற்றதோடு பந்து வீச்சில் யூ.சப்ஹி 21/7, ஜ.அபாத் 16/4 விக்கெட்டுகளையும் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் பெற்றனர்.

மேலும் இந்த போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், மாணவர்களை வழிப்படுத்தி பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பழைய மாணவர் சங்கத்தினர் சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

முட்டை விலை குறைகிறது..! நுகர்வோருக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

முட்டை விலை குறைகிறது..! நுகர்வோருக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

அலி சப்ரியின் கருத்திற்கு ஜம்இய்யா வெளியிட்ட கடும் கண்டனம்

அலி சப்ரியின் கருத்திற்கு ஜம்இய்யா வெளியிட்ட கடும் கண்டனம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGalleryGalleryGallery