மட்டக்களப்பில் வாள்களுடன் சந்தேகநபர்கள் கைதான சம்பவம்! ஒருவர் பிணையில் விடுவிப்பு

Batticaloa
By Mayuri Sep 28, 2024 12:23 PM GMT

மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசத்தில் இரு வாள்களுடன் கைது செய்யப்பட்ட 25 வயது இளைஞரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (27) பிணையில் விடுவித்துள்ளார்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆரையம்பதி பிரதேசத்தில் நேற்று முன்தினம் (26) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3 அடி நீளம் கொண்ட இரு வாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பிணையில் விடுவிப்பு

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவரை பொலிஸார் விடுவித்துள்ள நிலையில், மற்றையவரை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் நேற்றைய தினம் முன்னிலைப்படுத்திய நீதவான் அவரை பிணையில் விடுவித்துள்ளார்.  

மட்டக்களப்பில் வாள்களுடன் சந்தேகநபர்கள் கைதான சம்பவம்! ஒருவர் பிணையில் விடுவிப்பு | Youth Arrested With Swords Released On Bail

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW