மட்டக்களப்பில் நச்சுத்தன்மையுள்ள மீனை உட்கொண்ட இளம் தாய் உயிரிழப்பு

Batticaloa Sri Lanka Police Investigation Death
By Fathima Jun 08, 2023 07:28 PM GMT
Fathima

Fathima

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் சமைத்து உட்கொண்ட உணவு நஞ்சாகியதில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இன்றையதினம் (08.06.2023) உயிரிழந்துள்ளார்.

மதிய உணவை உட்கொண்ட பின்னர் அவரது 4 மற்றும் 7 வயதுடைய இரு பிள்ளைகள் மற்றும், அவரது தாயார் உட்பட 4 பேர் வாந்தியெடுத்த நிலையில் மயங்கியுள்ளனர்.

மட்டக்களப்பில் நச்சுத்தன்மையுள்ள மீனை உட்கொண்ட இளம் தாய் உயிரிழப்பு | Young Women Has Died Food Poison Batticaloa

நச்சுத்தன்மையுள்ள மீன்

மாங்காடு பகுதியிலுள்ள கடற்கரையில் கடற்றொழிளாலர்களின் வலையில் சிக்கிய குறித்த மீனை எடுத்து வீசியுள்ளனர்.

இதனை குறித்த குடும்பத்தினர் பொறுக்கியுள்ளதாகவும், அப்போது இது சமைப்பதற்கு உகந்த மீன் இல்லை அதனை எடுக்க வேண்டாம் என கடற்றொழிளாலர்கள் கூறியும் அதை பொருட்படுத்தாது அந்த மீனினத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

மட்டக்களப்பில் நச்சுத்தன்மையுள்ள மீனை உட்கொண்ட இளம் தாய் உயிரிழப்பு | Young Women Has Died Food Poison Batticaloa

கடல் மீனினமான பேத்தை என்ற மீனை மதிய உணவுக்காக சமைத்து உட்கொண்டதன் காரணமாகவே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலதிக விசாரணை

இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் உடனடியாக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் 27 வயதுடைய பெண் உயிரிழந்துடன் ஏனையோர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.