புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி: ஒருவர் கவலைக்கிடம்
புத்தளம் (Puttalam)- அனுராதபுரம் பிரதான வீதியின் சிறாம்பியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (6) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கவலைக்கிடம்
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் கருவலகஸ்வெவ 8ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் சிக்கிய மற்றுமொருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துத் தொடர்பில் பேருந்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த விபத்து தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |