கந்தளாய் பகுதியில் ஏற்பட்டுள்ள விபத்து : அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவர்
கந்தளாய் பிரதேசத்தில் 86ஆவது மைல் கல் எனும் இடத்தில் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(06) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேலும், இதன்போது பலத்த காயங்களுக்கு ஆளாகிய நிலையில் பவுசர் சாரதியும், அவரது உதவியாளரும் கந்தளாய் தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த சீமந்தை ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, முன்னால் வேகமாக வந்த காரோன்றுக்கு விலகி இடம்கொடுக்க முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், காயமடைந்த இருவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |