மாவனல்லை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவிகளுக்கான Xecutive Chef Season 2 போட்டி நிகழ்ச்சி

Kegalle Sri Lankan Schools
By Fathima Mar 28, 2023 05:17 AM GMT
Fathima

Fathima

மாவனல்லை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவிகளுக்கான Xecutive Chef Season 2 போட்டி நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்ச்சி கடந்த 12ஆம் திகதி மாவனல்லை ராலியா வரவேற்பு மண்டபத்தில் கல்லூரியின் xZahirians அமைப்பின் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது.

இப்போட்டி நிகழ்ச்சியானது சிரேஷ்ட பிரிவு மற்றும் கனிஷ்ட பிரிவு என இரு பிரிவுகளாக நடைபெற்றிருந்தது. பழைய மாணவிகள் தங்கள் பாடசாலை குழுக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் குழு நிகழ்ச்சியாக நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.

அத்துடன் இந்த நிகழ்வு நடைபெறும் வளாகத்தில் சிறு உற்பத்தியாளர்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் Mini Boutique Bazaar ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவனல்லை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவிகளுக்கான Xecutive Chef Season 2 போட்டி நிகழ்ச்சி | Xecutive Chef Season 2

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவியும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியருமான Dr.Faseeha Azmi கலந்து சிறப்பித்தார். போட்டி நிறைவடைந்த பின்னர் மாலை 4 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

கனிஷ்ட பிரிவில் 2018 க.பொ.த உயர்தரம் முதலாம் இடத்தையும், 2019 க.பொ.த உயர்தரம் இரண்டாம் இடத்தையும் பெற்றதுடன், சிரேஷ்ட பிரிவில் 2013 க.பொ.த உயர்தரம் முதலாம் இடத்தையும், 2015 க.பொ.த உயர்தரம் இரண்டாம் இடத்தையும் தட்டிச் சென்றது. 

GalleryGalleryGalleryGalleryGallery