தமிழகத்திலிருந்து இலங்கை வர முயன்ற பெண் கைது: விசாரணையில் சிக்கிய முகவர்கள்
சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் படகுமூலம் வரவிருந்த பெண் ஒருவரும், அவருக்கு உதவிய இரண்டு முகவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2013 ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் தமிழகம் சென்ற குறித்த பெண், அதற்குப் பின்னர் இலங்கைக்கு நாடு திரும்பவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழக பொலிஸார் விசாரணை
இந்த நிலையில், அவர் மீண்டும் படகினூடாக நாடு திரும்புவதற்காக 50 ஆயிரம் ரூபாவை செலுத்தி ராமேஸ்வரம் கடற்பகுதியில் படகுக்காக காத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு உதவிய இரண்டு முகவர்களையும் கைது செய்துள்ள தமிழக பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |