போலிச் செய்திகளை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஆபத்து
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஏராளமான போலி செய்தி இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக புளூம்பெர்க் இணையத்தளம் எச்சரித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் AI மென்பொருட்களால் உருவாக்கப்பட்ட ஏராளமான செய்தி இணையத்தளங்களை நியூஸ்கார்ட் செய்தி மதிப்பீடு குழு கண்டறிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போலிச் செய்தி
மேலும் இந்த இணையத்தளங்கள் போலிச் செய்திகளை வெளியிட்டு, நிரல் விளம்பரங்களை இயக்குவதன் மூலம் ஓரளவு வருமானம் ஈட்டியுள்ளன என்று ப்ளூம்பெர்க் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
ப்ளூம்பெர்க்கின் இந்த அபாய எச்சரிக்கையுடன் இந்த இணையத்தளங்கள் மூலம் விளம்பரங்களை வெளியிடுவதை கூகுள் நீக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.